இது நடந்தால் மத்திய – மாநில அரசுகளின் உறவு சிக்கலாகிவிடும் – டிடிவி தினகரன்

Default Image

இந்திய ஆட்சிப்பணி விதிகளை மத்திய அரசு திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று அமமுக பொதுசெயயலாளர் டிடிவி தினகரன் ட்வீட்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இப்படி ஒரு முடிவெடுக்க மத்திய அரசு தீர்மானித்திருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மாநிலங்களில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்படுவதுடன், மத்திய – மாநில அரசுகளின் உறவும் சிக்கலாகிவிடும். சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இத்தகைய குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கூட்டாட்சி நடைபெறும் இந்தியா போன்ற நாட்டுக்கு உகந்ததல்ல. இதையெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் சீர்தூக்கி பார்த்து செயல்பட வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்