ஒற்றைத் தலைமை கொண்டு வந்தால் இரட்டை இலைச் சின்னமே கேள்விக் குறியாகும் என்று ஓபிஎஸ் தரப்பு எழுதிய கடிதத்தில் தகவல்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. இதனால், ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். யார் அந்த ஒற்றை தலைமை என்பதை கட்சி முடிவு செய்யும் என ஒருய சில நிர்வாகிகள் கூறும் நிலையில், இரட்டை தலைமையே நீடிக்கும் என மற்றொரு பக்கம் தெரிவித்து வருகின்றனர். இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது ஒற்றை தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதிமுகவில் அமைப்பு ரீதியாக மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்-க்கு 64 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், ஒன்றை தலைமை உருவானால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து ஆதரவு நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விரிவான கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது. அந்த கடிதத்தில், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சி விதிகள் திருத்தப்பட்டால் சட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒற்றைத் தலைமை கொண்டு வந்தால் இரட்டை இலைச் சின்னமே கேள்விக் குறியாகும் என்றும் அதிமுக தொண்டர்களிடையே பிளவை ஏற்படுத்தும் தூண்டு கோலாக அமைந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தரப்பிலிருந்து அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எழுதிய 4 பக்க கடிதத்தில் 11 அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…