புதுச்சேரியோ, தமிழகமோ பாஜகவில் சேருபவர்கள் காணாமல் தான் போய் விடுவார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற நிலையில் தான் நான் செயல்பட்டு வருகிறேன். ராஜினாமா செய்தவர்களின் சரித்திரம் பற்றி புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும். தேர்தல் நெருங்கும்போது இதுபோன்று நடக்கும். அதையும் சமாளித்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக புதுச்சேரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார். நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்எல்ஏவும் தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்தார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…