தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால், வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என நீதிபதிகள் கேள்வி.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில், தொலைநிலை கல்வியில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்க கூடாது எனக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ் வழியில் படித்தவர்கள் என்றால், பள்ளியிலிருந்தே தமிழ் வழி கல்வி பயின்றவர்களா? அல்லது பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வரும் நிலையில், பட்டப் படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதும் என்றால், அதன் நோக்கமே சிதைந்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல் மறைந்து விடும் என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால், வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில், அஞ்சல் வழியில், தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு, அரசாணையில் திருத்தம் கொண்டு வரும் வரை, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு நடத்த ஏன் தடை விதிக்க கூடாது என கேள்வி எழுப்பி, நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…