நாளை பதிலோடு வாருங்கள்… செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.! 

Senthil Balaji Case in Supreme court of India

டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையினரிடம் பதில் இல்லை என்றால் நாளை பதிலுடன் வாருங்கள். – உச்சநீதிமன்றம்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் விசாரணை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனை அடுத்து, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓஹா  அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

அப்போது அமலாக்கத்துறையினரிடம் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் கூற அமலாக்கத்துறை சற்று திணறியது என்றே கூறலாம்.  நீதிபதி அமர்வு கூறுகையில், பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதாக கூறினீர்கள். ஆனால், அது செந்தில் பாலாஜி கைது செய்யப்படும்போது கைப்பற்றப்படவில்லை. அதன் பிறகு அந்த பென்டிரைவ் எப்படி வந்தது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அமலாக்கத்துறை, முன்னதாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து அந்த பென்டிரைவ் பெறப்பட்டது என அமலாக்கத்துறை பதிலளித்தது.

இதனை அடுத்து, பென்ட்ரைவில் உள்ள தரவுகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என்றும் அமலாக்கத்துறை தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பின்னர் பேசிய நீதிபதி அமர்வு, கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் இருந்தால் அதனை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துங்கள்.

பென்டிரைவ் பற்றி 15 நிமிடங்ளாக நாங்கள் கேட்டு வருகிறோம். ஆனால், நீங்கள் (அமலாக்கத்துறை) பதில் சொல்லாமல் உள்ளீர்கள். பென்டிரைவ் போன்ற சாதனங்களை தடவியல் நிபுணர்கள் தான் பரிசோதித்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்களும் நானும் தடவியல் நிபுணர்கள் அல்ல. அப்படி என்றால் தடவியல் நிருபனர்கள் பரிசோதனை ஆவணங்கள் எங்கே.?

இன்று உங்களிடம் பதில் இல்லை என்றால் நாளை வழக்கை தள்ளி வைக்கிறோம். நாளை நீங்கள் பதிலுடன் வாருங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு செந்தில் பாலாஜி ஜாமீன் மனு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்