தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரும் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த தருணத்தை பயன்படுத்தி சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதுண்டு.
இந்த நிலையில், பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி, 120 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்.! தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்து இருந்தாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் என்றும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் கூறுகையில், சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் தவறுகள் இல்லை என்றால் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வர்.
வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை இயக்கக் கூடாது என்று துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து வேலை நிறுத்தம் மாலையில் தொடர்ந்தால் அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…