பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டால் அது ஜனநாயகத்துக்கு பேராபத்தாகவே முடியும் – திருமாவளவன்
செய்தியாளர் மோசஸ் படுகொலையில் குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த மோசஸ் என்ற செய்தியாளர், அவரது வீட்டின் அருகே மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினார்கள்.பின்பு வெட்டுக்காயங்களுடன் மோசஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,செய்தியாளர் மோசஸ் படுகொலையில் குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்துக! ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. ஊடகவியலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டால் அது ஜனநாயகத்துக்கு பேராபத்தாகவே முடியும் என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் #மோசஸ் படுகொலை : குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்துக! ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. ஊடகவியலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டால் அது ஜனநாயகத்துக்கு பேராபத்தாகவே முடியும்! pic.twitter.com/dK9J4MXLLr
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 9, 2020