தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இருக்கிறதா?இருந்தால் அதனை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
மின்வெட்டு நேரத்தில் காற்றாலை மின்சாரத்தை ஏன் முழுமையாக பயன்படுத்தக்கூடாது? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.பின்னர் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ,தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அடுக்கடுக்கான கேள்வியை முன்வைத்தார்.
- தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இருக்கிறதா?
- இருந்தால் அதனை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? –
- தொழில் நிறுவனங்கள் பெருகிவரும் நிலையில் எதிர்காலத்தில் மின் தேவையை சமாளிக்க முடியுமா?
- மின்வெட்டு நேரத்தில் காற்றாலை மின்சாரத்தை ஏன் முழுமையாக பயன்படுத்தக்கூடாது?
பின்னர் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத் தலைவர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.