வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு – நிதியமைச்சர்
தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிலையில், எதாவது தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என நிதியமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை பற்றி விவரம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதற்குமுன் 2001ல் அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
இதையடுத்து தற்போது திமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கையை வெளியிட்டு வரும் நிதியமைச்சர், முதல்வர் முக ஸ்டாலின் காட்டிய பாதையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 2001ல் அதிமுக அமைச்சர் பொன்னையன் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், துறைவாரியாக விரிவாக இல்லை. வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என்பதற்காகவே என் பெயர் இடம்பெற்றுள்ளது என கூறினார்.