திமுக கொடுத்த தொலைக்காட்சி எந்த வீட்டிலாவது நல்ல நிலையில் இருந்தால் ரூ.1 லட்சம் தருகிறேன் – அமைச்சர் ஜெயக்குமார்
திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட தொலைகாட்சி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருந்தால் ரூ.1 லட்சம் தருகிறேன்.
அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் கடமை. எனவே பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய அரசிற்கு, தமிழக அரசு தெடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதிமுக கொடுத்த மிக்சி மற்றும் கிரெண்டரை இல்லத்தரசிகள் இன்னும் பயன்படுத்துகின்றனர் என்றும், ஆனால், திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட தொலைகாட்சி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருந்தால் ரூ.1 லட்சம் தருகிறேன் என்றும் சவால் விடுத்துள்ளார்.