தமிழக அரசால் உதவ முடியாவிட்டால் சீட்டு ஒதுக்குங்கள்! மு.க.ஸ்டாலின் ட்வீட்!

Default Image

தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்கள் இடம் கிடைத்தும் மாணவர்கள் அதனைத் தொடர முடியாத சூழல் நிலவுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், இதன் மூலமாக 405 மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர உள்ளனர்.  இந்த இடஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்த இயலாத நிலையில், உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து அரசு பள்ளி மாணவர்களின், கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்று அறிவித்தது. அதேபோல தமிழக அரசும் அந்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர் பணிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து மருத்துவ படிப்புகளில் இடம் கிடைத்தும் மாணவர்கள் அதனைத் தொடர முடியாத சூழல் நிலவுவதாகவும், அரசுத் தரப்பிலிருந்து இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்.’தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாமல் கேட்டரிங் பணிக்கு செல்லும் மாணவன் யுவன்ராஜ், திருவண்ணாமலையில் இதேபோல் தவிக்கும் மூன்று மாணவியர் என அவலங்கள் தொடர்கிறது. தமிழக அரசால் உதவ முடியாவிட்டால் சீட்டு ஒதுக்குங்கள், கட்டணத்தை திமுக ஏற்கும் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்