நிலைமை கைமீறினால் TC தான்.. அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் – அமைச்சர்

Default Image

ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையேயான பிரச்சனைக்கு தீர்வாக பள்ளிகளில் காலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என அமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் தவறாக நடந்து கொண்டதால் மன்னித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கப்படுகின்றன. இதுவரை சேட்டைகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு TC வழங்கப்படவில்லை. பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இனியும் எடுத்த எடுப்பிலேயே TC வழங்கப்படாது. நிலைமை கைமீறி சென்றால் தான் TC. மாணவச் செல்வங்கள் பள்ளிகளில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த, ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அரசு அறிவுறுத்துகிறது. ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மாணவர்களின் மன்றங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் ஆய்வகங்கள் அமைக்கப்படும். மாணவர்களை ஒருமனப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையேயான பிரச்சனைக்கு தீர்வாக பள்ளிகளில் காலை நிகழ்ச்சிகள் நடத்தலாம். மாணவர்களின் மனா அழுத்தத்தை போக்க கவுன்சிலிங் நடத்தி அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னர், காலை சிற்றுண்டிக்காக பள்ளி வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பள்ளிகளில் நேரம் மாற்றியமைப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்