முடிவுகளை 7 நாள்களுக்கு மேல் வெளியிடவில்லை என்றால்..தொற்று இல்லை என முடிவு செய்து கொள்ளலாமா..? உயர்நீதிமன்ற கிளை.!
மதுரையில் கொரோனா அதிகரித்ததன் அடிப்படையில் தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற கிளை விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கில் பொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..? உயிரி மருத்துவ கழிவுகளை அகற்ற விதிகள் உள்ள போது எப்போதும் நீதிமன்ற உத்தரவை எதிர்பார்ப்பது ஏன்..? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படுவது ஏன்..? முடிவுகளை 7 நாள்களுக்கு மேல் வெளியிடவில்லை என்றால் தொற்று இல்லை என முடிவு செய்து கொள்ளலாமா..? என்றும் பரிசோதனை முடிவு தாமதம் ஆனால் நம்பிக்கை குறைவாக உள்ளவர்கள் ஒரு தவறான முடிவை எடுக்க நேரிடுகிறது.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளின் விவரங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறதா..? போன்ற கேள்விகளை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்ற கிளை.