அரசியலமைப்பின்படி அரசியல் அமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை என தமிழக ஆளுநரின் பேச்சு.
குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ஆளுநர் ஆர்என் ரவி, ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாக பொருள். அதாவது, வார்த்தை அலங்காரத்துக்காக நிறுத்தி வைப்பு என்கிறோம், கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என பேரவையில் இயற்றிய தமிழக அரசு நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து மறைமுகமாக கூறியுள்ளார்.
சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் (மசோதாக்கள்), ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாக முடியாது. இரண்டாவது முறையாக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் 3வது வாய்ப்பு குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது தான் எனவும் குறிப்பிட்டார். அரசியலமைப்பின்படி அரசியல் அமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை. பொது பட்டியலில் உள்ளவைக்கும் மத்திய அரசு சட்டம் இயற்றாவிடினும் மாநில அரசு சட்டம் இயற்றலாம் எனவும் கூறியுள்ளார்.
ஆனால், மாநில அரசின் சட்டம் மத்திய அரசின் சட்டத்துடன் பொருந்த வேண்டும். பேரவையின் தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிக்கு உட்பட்டு இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டம் ஆகாது, சட்டசபையும் ஒரு அங்கம் மட்டும் தான் என தெரிவித்தார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…