சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஏற்றி வந்தால்.., ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து..!

Published by
murugan

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் வாகனங்களின் அனுமதி சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மாறாக சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் கீழ்கண்ட நடவடிக்கைகள் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை மூலம் எடுக்கப்படும்.

  • மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 66(1) மற்றும் பிரிவு 207-ன் கீழ் அனுமதி சீட்டு மற்றும் பதிவு சான்றை மீறிய குற்றத்திற்காக வாகனம் சிறை பிடிக்கப்படும்.
  • மேற்கண்ட குற்றத்திற்காக சிறைபிடிக்கப்பட்ட வாகனம் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 421 -ன் கீழ் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும்.
  • மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 192(A)-ன் கீழ் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ.10,000/- நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம்.
  • சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களின் அனுமதி சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மேலும், உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு உத்தரவின் படி ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்படும்.
  • எனவே பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றால் , மோட்டார் வாகன சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
Published by
murugan

Recent Posts

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான்  அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…

10 minutes ago

கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…

47 minutes ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…

1 hour ago

Bye Bye ஸ்டாலின்.., 2026-ல் திமுகவுக்கு பெரிய ‘ஓ’! இபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு தேதியில் எந்த மாற்றமா.?

பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

2 hours ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

3 hours ago