வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும் – அண்ணாமலை
எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் உள்ளது. விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் பாதுகாப்பதுபோல் தெரிகிறது என 200 நாட்களாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் நீடித்து வரும் நிலையில், தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும், ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது என்றுள்ளார்.