தமிழுக்கு பிரச்னை என்றால், இளைஞர்கள் களத்தில் நிற்பார்கள் : கவிஞர் வைரமுத்து
கடந்த சில நாட்களாக மத்திய அரசு வெளியிட்டுள்ள, புதிய கல்விக் கொள்கையில், இந்தி பேசாத மாநில பள்ளிகளில் எல்லாம், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, தலைவர்கள் இல்லா தமிழகம் என யாரும் தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழனுக்கு எதிராகவும் செயல்பட வேண்டாம் என்றும், தமிழுக்கு பிரச்சனை என்றால் இளைஞர்கள் களத்தில் நிற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.