ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா, கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா என பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டவர்கள் குறித்து நடிகர் கமல் பேசியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக செல்வம் எனும் மீன் விற்கும் தாய் பேருந்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் குறவர் குடும்பத்தை சேர்ந்த மூவர் பேருந்திலிருந்து, உடமைகளை தூக்கி எறிந்து வெளியே அனுப்பப்பட்டனர்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பேருந்திலிருந்து மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்ட சம்பவத்தால் தமிழகம் கொதித்து கிடக்கும் நிலையில் ,நேற்று குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு உடமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளது.
ஏழைகள் என்றல் எள்ளுக்கீரையை? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனி நிகழாமல் இருப்பதை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…