ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா, கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா…? நடிகர் கமல் காட்டம்…!

Default Image

ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா, கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா என பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டவர்கள் குறித்து நடிகர் கமல் பேசியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக செல்வம் எனும் மீன் விற்கும் தாய் பேருந்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் குறவர் குடும்பத்தை சேர்ந்த மூவர் பேருந்திலிருந்து, உடமைகளை தூக்கி எறிந்து வெளியே அனுப்பப்பட்டனர்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பேருந்திலிருந்து மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்ட சம்பவத்தால் தமிழகம் கொதித்து கிடக்கும் நிலையில் ,நேற்று குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு உடமைகளும் சாலையில்  வீசப்பட்டுள்ளது.

ஏழைகள் என்றல் எள்ளுக்கீரையை? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா?  ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனி நிகழாமல் இருப்பதை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்