காவல்துறையினர் கடமையை செய்யும்போது அவர்களை அச்சுறுத்தினால் நீதிமன்றம் மென்மையாக இருக்காது…! நீதிபதி எச்சரிக்கை…!

Default Image
  • கொரோனா காலத்தில் காவல்துறையின் பணி மிகவும் முக்கியமான ஒன்று.
  • காவல்துறையினர் கடமையை செய்யும்போது அவர்களை அச்சுறுத்தினால் நீதிமன்றம் மென்மையாக இருக்காது. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது 7-ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் அவசர தேவைகளுக்காக வெளியில் செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மே மாதம் திருச்சியை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கொரோனா வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணம் செய்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை நிறுத்தி முக கவசத்தை அணியுமாறு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அப்போது காவல்துறையினருக்கும், அதில் பயணம் செய்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தள்ளி விட்டுள்ளனர். இதனை அடுத்து, இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக திருச்சியை சேர்ந்த காஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது இந்த கொரோனா காலத்தில் காவல்துறையின் பணி மிகவும் முக்கியமான ஒன்று. அவர்கள் நீண்ட நேரம் பணிகளை செய்து வருவதால், அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக வாகனங்களில் செல்லும் போது காவல்துறையினர் நிறுத்தி கேள்வி கேட்டால் அதற்கு எங்கே செல்கிறோம்? எதற்காக செல்கின்றோம்? என்ற ஆவணங்களை காண்பிக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்வது, தகராறு செய்வது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது. இந்த விஷயங்களில் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் அந்த இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்குவதாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் மன்னிப்பு கேட்குமாறும், 10,000 அபராதம் விதித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காஜாவை கைது செய்வதற்கு தடை விதித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்