நாங்கள் கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால் 3-வது அணி உருவாகும் – சரத்குமார்
நாங்கள் கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால் புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என சரத்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேட்டியளித்த அவர் அதிமுக கூட்டணியில் ஒரு சீட்டு, 2 சீட்டு 3 சீட்டு என்று நாங்கள் ஏற்க மாட்டோம். நாங்கள் கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால் புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என சரத்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.