மக்கள் சக்தி திரண்டால், சட்டங்கள் தூள் தூளாகும் – மு.க. ஸ்டாலின்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மக்கள் சக்தி முன்னால் இந்த சட்டங்களே தூளாகும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் கொரோனா பரவலால் காரணமாக கிராம சபை கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு முன்னர் வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், தங்களது கிராமசபைக் கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, நேற்று சென்னை பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூர் கிராமத்தில் தடையை மீறி கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்தினார்.கிராம மக்களிடம் சமூக இடைவெளியுடன் குறைகளை கேட்டறிந்தார்.இந்த கூட்டத்தில் 100 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப்பெறு என்ற வாசகம் அடங்கிய முக கவசம் அணிந்து இருந்தார்.மேலும் தடையை மீறி மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், ஸ்டாலின் அவர்கள் கொரோனா பரவல் ஏற்படும் சூழலை உருவாக்கியதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களுக்குப் பயந்து கிராம சபைக்குத் தடை விதித்தார்கள். கிராமங்களில் ‘மக்கள் சபை’யாகத் திரண்டது மக்கள் திரள்! #DMKwithFarmers என திரண்ட எங்கள் மீது வழக்காம். மண் காக்கும் போரில் வழக்குகள் தூசு; மக்கள் சக்தி முன்னால் இந்த சட்டங்களே தூளாகும் என்று தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களுக்குப் பயந்து கிராம சபைக்குத் தடை விதித்தார்கள்.
கிராமங்களில் ‘மக்கள் சபை’யாகத் திரண்டது மக்கள் திரள்!#DMKwithFarmers என திரண்ட எங்கள் மீது வழக்காம்!
மண் காக்கும் போரில் வழக்குகள் தூசு;
மக்கள் சக்தி முன்னால் இந்த சட்டங்களே தூளாகும்! pic.twitter.com/B0B6sopz32— M.K.Stalin (@mkstalin) October 2, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
“பாஜக தலைவராக நான் தொடர முடியாது! அதற்கு முன்னால்..,” அண்ணாமலை ஆவேசம்!
February 13, 2025![TN CM MK Stalin - BJP State president Annamalai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TN-CM-MK-Stalin-BJP-State-president-Annamalai.webp)
“அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும்.., என்னை சோதிக்காதீர்கள்!” இபிஎஸ் பெயரை தவிர்த்த செங்கோட்டையன்!
February 13, 2025![ADMK Former minister Sengottaiyan - ADMK Chief secretary Edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ADMK-Former-minister-Sengottaiyan-ADMK-Chief-secretary-Edappadi-palanisamy.webp)
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)