நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்று முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்று நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக வழக்கு தொடர 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர பஞ்சாப், ராஜஸ்தான், சத்திஸ்கர், புதுச்சேரி, மேற்குவங்கம், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், #POSTPONEJEE_NEET எனக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை எடுத்த அன்னை சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவி்ததுக் கொள்கிறேன் என்றும் நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்கள் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வேண்டுகோள் விடுத்தது வந்த சூழலில், தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மற்றும் நீட் ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…