தமிழக அரசு சார்பில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனம் மூலம் பால் உள்ளிட்ட, பால் சம்பந்தப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்ப்பட்டு வருகிறது.
இந்த ஆவின் நிறுவன பால் ஒரு சில இடங்களில் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என புகார்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
372 காலிப்பணியிடங்கள்.. அண்ணா பல்கலைக்கழகத்திற்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
அவர் மேலும் கூறுகையில், சென்னையில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாக புகார் வந்த போது நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு சில இடங்களில் அந்த நபருக்கு ஆவின் விற்பனை உரிமம் வழங்காமல் வேறு ஒருவருக்கு வழங்கியுள்ளோம். எங்களிடம் (ஆவின்) நேரடியாக மொத்த வியாபாரிகள் வாங்கி அதனை மக்கள் பெறுகையில் இம்மாதிரியான குற்றசாட்டுகள் வரவில்லை.
மாறாக, மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கி அவர்கள் மூலம் பொதுமக்கள் வாங்கும் போது தான் இம்மாதிரியான பிரச்சனைகள் எழுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் தான் கேள்வி எழுப்ப வேண்டும். ஆவின் பாலை அதிக விலைக்கு ஏன் விற்கிறீர்கள் என கேள்வி கேட்க வேண்டும்.
கொரோனா காலத்தில் கால்நடை பராமரிப்பு சரிவர இல்லாமல் இருந்தது. அது குறித்து தற்போது ஆய்வு நடத்தி வருகிறோம் முந்தைய கால நிர்வாக குளறுபடிகளை சரி செய்து வருகிறோம். தற்போது விளைநிலங்கள் என்பது குறைந்துவிட்டது. இதனால் கால்நடை தீவனம் போன்றவை குறைந்து கொண்டே வருகிறது. முன்னர் ஆவினில் இருந்து பால் மட்டுமே விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது பால் பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 8 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…