மருத்துவக்குழு அனுமதித்தால் தேர்தலில் போட்டியிடுவேன்-வேல்முருகன்
- மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது.
- மருத்துவக்குழு அனுமதித்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது.தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் உயிரோடு இருக்கவே தார்மீக உரிமை இல்லை.பொள்ளாச்சி பாலியல் கொடூரச் சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். கடுமையான தண்டனை நீதிமன்றம் வழங்க வேண்டும்.
தினகரன், நான் கூட்டணிக்கு வருவேன் என்று காத்திருந்தார்.ஆனால் நான் செல்லவில்லை என் வீட்டுக்கு வந்தும், மருத்துவமனைக்கு வந்தும் கூட்டணிக்கு வாருங்கள் என்று பல்வேறு கட்சியினர் அழைத்தனர்.
நான் விஜயகாந்த் போல் அரசியல் செய்ய விரும்பவில்லை.நான் எந்த கூட்டணியிலும் இடம்பெறவில்லை .பதவிக்காக அலைபவன் நான் அல்ல. எம்எல்ஏ ஆக விரும்புபவன் அல்ல .மருத்துவக்குழு அனுமதித்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.