மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைத்தால் இது எல்லாம் நடக்கும் என்பதால் அனுமதி கொடுக்கக்கூடாது -மாவட்ட ஆட்சியரிடம் மனு

சேலம், காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பதகாவே, மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து தலைவராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளா வனப்பகுதியில், இவர் கடந்த 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, மணிவாசகத்தின் சொந்த ஊரான ராமமூர்த்தி பகுதியில், அவரது உடலை அடக்கம் செய்வதற்கான முயற்சிகளில் அவரது உறவினர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து, அந்த ஊர்மக்கள் மணிவாசகத்தின் உடலை, அந்த ஊரில் புதைக்க கூடாது என்று, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இவரது உடல் இந்த ஊரில் புதைக்கப்பட்டால், ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி என்று கூறி மாவோயிஸ்டுகள் வரக்கூடும், இதனால் இப்பகுதி இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும், இதனால் அவரது உடலை ஊருக்குள் புதைக்க கூடாது என்றும் மக்கள் மனு அளித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025