அண்ணாமலை கூறிய புகாரை நிரூபிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை- அமைச்சர் செந்தில்பாலாஜி..!

Default Image

சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளித்தார். அப்பொழுது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம்.  எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து புரிதலின்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் தான் ஒப்பந்தம்:

கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய பணிகள் கடந்த 10 ஆண்டுகால முந்தைய அதிமுக ஆட்சியின் போது இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மின் திட்டத்திற்கான வைப்புத்தொகை 3% என குறிப்பிட்டு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அண்ணாமலை கூறிய புகாரை நிரூபிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  பி.ஜி.ஆர் நிறுவனத்துடன் கடந்த 2019-இல் அதிமுக ஆட்சியில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது.

இபிஎஸ், தங்கமணியிடன் கேட்க வேண்டிய கேள்விகளை அண்ணாமலை தற்போது முன்வைத்துள்ளார். நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு போது கூட தமிழகத்தில் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

அண்ணாமலை  பேட்டி: 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , பிஜிஆர் எனர்ஜி என்ற தகுதியே இல்லாத நிறுவனத்திற்கு ரூபாய் 4,400 கோடி காண்ட்ராக்ட்டை தமிழக மின்வாரியம் கொடுத்திருக்கிறது. இனி அடிக்கடி தமிழ்நாட்டில் மின்வெட்டு வரலாம். மக்கள் வீடுகளில் யூபிஎஸ், ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் எனதெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்