முதலமைச்சர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் வழக்கு தொடரப்படும்…. சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி…..
- முதலமைச்சர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் வழக்கு தொடரப்படும்.
- தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக சேலம் புறநகரில் மட்டும் இதுவரை 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குசேகரிப்பின் போது, விதிமீறியதாக எழுந்த புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் வழக்கு தொடரப்படும் எனக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக சேலம் புறநகரில் மட்டும் இதுவரை 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.