சாதி மாறி காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? – மநீம
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா?
கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து மநீம கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும்.’ என பதிவிட்டுள்ளனர்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும்.(2/2)
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) June 14, 2022