சிஏஏவை திரும்ப பெறாவிட்டால் இஸ்லாமியருக்கு ஆதரவாக அமமுக போராட்டத்தில் குதிக்கும்.!

Default Image
  • மதத்தின் அடிப்படையில் சட்டம் கொண்டுவருவது தவறு என்றும் அதனால்தான் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாககவும் டிடிவி தினகரன் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட டிடிவி  தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் இஸ்லாமியருக்கு ஆதரவாக அமமுகவும் போராட்டத்தில் களமிறங்கும் எனவும், மதத்தின் அடிப்படையில் சட்டம் கொண்டுவருவது தவறு என்றும் அதனால்தான் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாகவும் கூறினார்.

மேலும் சென்னை வண்ணாரபேட்டையில் நடைபெற்ற சம்பவம் குறித்த பேசிய அவர், பொது அமைதியை பாதுக்காக வேண்டிய அரசு போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்