என்னுடைய ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டால் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் அறிவித்தார்.அதில் 1 லட்சம் தொண்டர்களுக்கு கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.ஆனால் அவர் நினைத்தது போல் தொண்டர்கள் என்ணிக்கை இல்லை.இதன் பின்னரும் தனது பேட்டியை குறைத்து வந்தார்.அது மட்டும் அல்லாமல் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியும் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது மு.க.அழகிரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் திருவாரூரில் போட்டியிடுவது பற்றி பார்க்கலாம். என்னுடைய ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டால் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன். திருவாரூரில் எனக்கு எல்லோருமே ஆதரவு தருவார்கள்.அதேபோல் தற்போது அரசியல் எங்கு நடக்கிறது.போராட்டம் தான் நடக்கிறது .கருணாநிதியின் கொள்கைகளை என்றும் பின்பற்றுவேன், என்னை பாஜக இயக்குவதாக கூறுவது வதந்தி என்றும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…