தமிழர்கள் அனைவரும் பச்சை தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர் -முதல்வர்..!

Default Image

சிறந்த கேப்டன்ஷிப் என்றாலே தோனிதான், தோனியின் ஹெலிக்காப்டர் ஷாட்டுகளை யாராலும் மறக்க முடியாது என முதல்வர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக மட்டுமல்ல தோனியின் ரசிகராக விழாவுக்கு வந்துள்ளேன். நான் மட்டுமல்ல எனது குடும்பமே தோனியின் ரசிகர்கள். முன்னாள் முதல்வர் கலைஞரும் தோனியின் ரசிகர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை என்றாலே சூப்பர் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு பற்றிய சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

கோட்டையில் இருந்தாலும் குடிசையில் இருப்பவர்களை பற்றி சிந்திக்க வேண்டும் கலைஞர் கூறியுள்ளார். சென்னை மேயராக இருந்தபோது காட்சிப் போட்டி ஒன்றில் கபில்தேவ் உடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். ஜார்க்கண்டைச் சார்ந்த தோனி சென்னைகாரராகவே மாறிவிட்டார். தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர். தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை. நெருக்கடிகள் இருந்தாலும் கலைஞரும், தோனியும் கூலாக இருப்பார்கள். தோனியின் ஹெலிக்காப்டர் ஷாட்டுகளை யாராலும் மறக்க முடியாது.

டெண்டுல்கருக்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் என்றால் தோனிதான். தமிழக மக்கள் தங்களில் ஒருவராக தோனி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சிறந்த கேப்டன்ஷிப் என்றாலே தோனிதான். சாதாரண பின்புலத்திலிருந்துவந்து அசாதாரண உயரங்களைத் தொட்டவர் தோனி. வெளிநாட்டு வீரர்களையும் உள்நாட்டு வீரர்களையும் இணைத்து வெற்றியீட்டியுள்ளார் தோனி. இலக்கும், உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்த முடியாது. Dear Dhoni We want you to lead CSK for many more season என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்