தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!

தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத் தர மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

MKStalin

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள் பொதுக்கூட்டங்களும், நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று வீடியோ ஒன்றிய வெளியிட்டுள்ளார். அதில், “தமிழையும் தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்க, திமுக ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள், அலறுகிறார்கள்.

நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மையையும் மொழிவழிப் பண்பாடுகளையும் சிதைத்து, ஒற்றுமையைக் குலைப்பவர்கள்தான் உண்மையான தேசவிரோதிகள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூக நீதி, சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும்.

இந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே அதுக்கான எல்லா முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாடு உயிர் பிரச்சினையான மொழிப்போரையும் – தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள், மக்களிடம் கொண்டு சேர்க்கக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும், இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்கினோம். இப்போது கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக் குரல் வந்துள்ளது. ஒன்றிய அரசு, இந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே அனைத்து முன்னெடுப்புகளையும் எடுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், நமக்கான நிதியையும் இன்னும் தரவில்லை.

இந்தி பேசும் மாநிலத்தவர் தமிழர்களை இந்தியில் திட்டினால் பதிலுக்கு தமிழில் திட்ட முடியாதா? சுயமரியாதை, சூடு சுரணை உள்ள தமிழர்கள் அப்படித்தான் செய்வார்கள். பாஜகவினர் எப்படியோ?  தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத் தர மாட்டோம். தமிழ்நாட்டிற்காக ஒன்றுப்பட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும்… தமிழ்நாடு வெல்லும்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்