வெற்றி பெற்றால்.. வங்கி கணக்கில் ரூ.1 கோடி, ஐ போன், நீச்சல் குளத்துடன் 3 மாடி வீடு – சுயேட்சை வேட்பாளரின் வாக்குறுதி

Default Image

மதுரை தெற்கில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சரவணன் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக தனது வாக்குறுதியை அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது தேர்தல் அறிக்கைகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கலள் செய்ய முடியும், பல திட்டங்களுக்கு சாத்தியமில்லை என விமர்சகர்கள் தெரிவித்தன.

இதனைத்தொடர்ந்து அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தன்னுடைய தொகுதி மக்களுக்கு இதையெல்லாம் செய்வேன் என பல்வேறு வாக்குறுதிகள் அளித்து வருகின்றன. இதில் குறிப்பாக அதிமுக, திமுகவை மிஞ்சும் வகையில் சுயேட்சை வேட்பாளரின் வாக்குறுதிகள் பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தினாலும், சிந்திக்கவும் வைத்திருக்கிறது.

அந்தவகையில், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் துலாம் சரவணன் என்பவர் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக தனது வாக்குறுதியை அளித்துள்ளார். அதில், நீங்கள் எனக்கு அளிக்கும் வாக்குகள், சட்டமன்றத்தில் உங்களுக்காக ஒலிக்கும் என் வார்த்தைகள், நமது நேர்மையின் சின்னம் குப்பைத்தொட்டி எனத் தெரிவித்துள்ளார்.

அதாவது தேர்தலில் வெற்றி பெற்றால், மக்கள் அனைவர்க்கும் இலவசமாக ஐ-போன் வழங்கப்படும். நீச்சல் குளம் வசதியுடன் 3 மாடி வீடு கட்டித்தரப்படும். வீட்டிற்கு ரூ.1 கோடி வங்கி கணக்கில் செலுத்தப்படும். ரூ.20 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஹெலிகாப்டர், இல்லத்தரசிகளுக்கு ரோபோ, பெண்கள் திருமணத்திற்கு 100 பவுன் நகை வழங்கப்படும்.

இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.1 கோடி, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.10 லட்சம், வீட்டுக்கு ஒரு படகு, 100 நாட்கள் பயணமாக நிலாவுக்கு அழைத்து செல்லப்படும். தொகுதியில், விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் மற்றும் செயற்கை பனி மலை என வித்தியாசமான வாக்குறுதிகளை அளித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

இதுபோன்ற வாக்குறுதிகளும் ஒருவரால் கொடுக்கமுடியுமா என்று, தமிழக அரசியல் வரலாற்றில், இப்படி ஒரு வாக்குறுதிகளை யாரவது கொடுத்து இருப்பார்கள் என்றால், இல்லை என்பதே பதில். சுயேட்சை வேட்பாளர் சரவணன் தேர்தல் வாக்குறுதி பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்கள்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்