சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் கட்சி 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் – யுவராஜ்

Default Image

சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் கட்சி 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, மருத்துவமனையில் இருந்து 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் ஒரு வாரம் ஓய்வுக்காக அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் சசிகலாவை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் கர்நாடக மாநில அமமுக செயலாளர் சம்பத் ஆகியோர் ஒன்றாக சந்திக்க சென்றதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் கூறப்பட்டது. ஆனால், சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 3ம் தேதி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அதிமுக கழக செயலாளர் யுவராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் – ஈபிஎஸ் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சசிகலாவை சந்திக்க சென்றதற்காக கர்நாடகா அதிமுக மாநில செயலாளர் பதிவில் இருந்து நீக்கப்பட்ட யுவராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து கூறுவது தவறு. சில அமைச்சர்கள் வழிதவறி செல்கின்றனர் என்றும் சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் கட்சி 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்