சசிகலா அதிமுக என்றால், தினகரனுடன் தொடர்பில் இருப்பது ஏன்? – ஓ.எஸ்.மணியன்

Default Image

சசிகலா அதிமுகவை சேர்ந்தவர் என்றால், தினகரனுடன் தொடர்பில் இருப்பது ஏன் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் விவசாய பயிர் கடன் தள்ளுபடி போன்று நெசவாளர்களுக்கு எதாவது தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு இருக்கின்றதா என்றும் இந்த கொரோனா சூழலில் அவர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அமைச்சர், முதல்வர் பழனிச்சாமி சேலத்தில் மிகப்பெரிய அளவில் வெண்பட்டு தயாரிக்கும் நெசவாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.

இதனால் கண்டிப்பாக அவர்களது கோரிக்கையை பரிசீலினை செய்வர் என்று கூறியுள்ளார். அதிமுகவை பொறுத்தவரை கட்சியின் வெற்றியை, வீழ்ச்சியை நிர்மாணம் செய்பவர்கள் யார் என்று கேட்டால் கடைசி தொண்டன் எடுக்குற முடிவுதான். இவர்கள்தான் அதிமுகவின் வளர்ச்க்கு முக்கிய காரணம். தொண்டர்கள் என்ன விருப்புகிறார்க்ளோ அதைத்தான் முதல்வர், துணை முதல்வர் செய்வார்கள் என சசிகலா வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தினகரன் இதுவரை அதிமுகவை ஒழித்துவிட வேண்டும் என்றும் இந்த கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடும் உள்ளார். அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கி, தனி கொடி, தனி சின்னத்தை அறிமுகப்படுத்தினார். அதேபோல் அதிமுகவில் இருந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்றார். அதிமுக ஆட்சி வீழ்ச்சியடைய வேண்டும், ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என அவர் ஆசைப்பட்டார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதைமீறி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நான்கு ஆண்டு காலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். எதையும் சந்திக்க தயார் என்ற முறையில் முதல்வர் ஆட்சியை நடத்தி வருகிறார். மக்கள் அதிமுக ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். இரட்டை இல்லை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தினகரன் முயற்சி செய்தார். திமுகவைவிட, அதிமுகவுக்கு அதிக தொல்லை கொடுத்தது தினகரன் தான் என குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா சிறையில்  இருக்கும் போது தினகரன் சென்று பார்த்தார். அப்போது நான் அதிமுக, நீ அமமுக வராத என்று சசிகலா சொல்லிருக்க வேண்டும். கட்சி ஆரம்பித்தது என அனைத்தும் பணிகளையும் சசிகலாவை கேட்டுத்தான் செய்கிறேன் சென்று பேசி வரும் அவர், இன்றைக்கு அதிமுகவை உரிமை கோருவது எந்த வகை நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சசிகலா அதிமுகவை சேர்ந்தவர் என்றால், அவர் தனிக்கட்சி நடத்திவரும் தினகரனுடன் தொடர்பில் இருப்பது ஏன் என்றும்  அமைச்சர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்