சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சியம் சலசலப்பு ஏற்படும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெங்களூருவை சார்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கேட்ட கேள்விக்கு சசிகலா ஜனவரி மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.
அபராதத் தொகையை கட்டத் தவறினால் சசிகலாவின் விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வேலைகளில் டிடிவி தினகரன் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் 7 மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை ஒரு வழியாக பாஜக, அதிமுகவில் இணைத்துவிட்டால், தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும்.
சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்று சேர்ந்தால், அதிமுகவில் யார் தலைமை என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. ஒரு வேளை இந்த நால்வர் கூட்டணி ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வரும் சட்டசபை தேர்தல் திமுகவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சியம் பெரும் சலசலப்பு ஏற்படும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…