சசிகலா சிறையில் இருந்து வந்தால் அதிமுகவின் நிலைப்பாடு என்ன ? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சசிகலா சிறையிலிருந்து வந்தாலும், அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றமிருக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா,சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணையில்,ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், சசிகலாவிற்கு நன்னடத்தை விதிமுறைகள் கிடையாது தண்டனை முழுவதும் அனுபவித்த பின்புதான் சசிகலா விடுதலை ஆவார் என கூறினார்.
இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.
இதனிடையே இன்று தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் அப்பொழுது அவர் கூறுகையில் , சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும் எனவும், நான் சாதாரண மாவட்ட செயலாளர் என கூறினார்.
இந்நிலையில் சசிகலா குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,சசிகலா சிறையிலிருந்து வந்தாலும், அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றமிருக்காது.ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி செல்வதை அதிமுக அனுமதிக்காது. ஒரு சிலரை தவிர, யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025