20,000 கோடி தினகரன் வைத்துள்ளதாக ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது அதை உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு உறுதி செய்தது. பின்னர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் மூன்றுபேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ,ரூ.10 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டிருந்தது. சசிகலா, இளவரசி தரப்பில் அபராதத் தொகையை செலுத்தப்பட்டு விடுதலையாகிவிட்டனர். ஆனால் சிறையில் உள்ள மற்றொரு குற்றவாளியான சுதாகரன் இன்னும் அபராதத்தொகை செலுத்தாததால் விடுதலையாகவில்லை.
இந்நிலையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், எங்கே போய்விட்டார் சுதாகரன்.தினகரனிடம் பணமா இல்லை.20,000 கோடி தினகரன் வைத்துள்ளதாக ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார்.ஒரு ரூ.10 கோடி ரூபாய் சொந்த தம்பிக்காக செலவு செய்தால் குறைந்தா போய் விடுவார்.சொந்த தம்பியை காப்பாற்றி வெளியே கூட்டிவிட்டு வர ஆர்வம் இல்லை என்றால் , இந்த கட்சியில் உள்ள உறுப்பினர்களை எப்படி காப்பாற்ற போகிறார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…