தேர்தலின் போது ரஜினி அதிமுகவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் – கடம்பூர் ராஜு
அதிமுக-வுக்கு ஆதரவாக தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்று பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக, ஜனவரி மாதம் கட்சி தொடங்குவோம் என்றும், அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பேன் என்று தெரிவித்து, இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது வீடு திரும்பியுள்ள நிலையில், உடல் நலனை கருத்தில் கொண்டு கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிப்பதும், தொடங்காமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம். பொதுவாக நடிகர் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதனால் அதிமுகவுக்கு எவ்வித பின்னடைவும் இல்லை என்றும், ரஜினிகாந்த் தேர்தலின்போது யாருக்கு வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய சொந்த விருப்பம். அவரைக் கட்டாயப் படுத்த இயலாது என்றும், நண்பர் என்ற முறையில் முதல்வர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.