அதிமுகவில் ஒரே தலைமை வேண்டும்!ராஜன் செல்லப்பா கூறியது பற்றி கருத்து தெரிவித்தால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுகவில் ஒரே தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது பற்றி கருத்து தெரிவித்தால் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிடும்.மேலும் ஸ்டெர்லைட், மீத்தேன் திட்டங்களுக்கு கருத்து கேட்டால் மக்களுக்கு பதில் அரசியல் கட்சியினர்தான் வருகின்றனர். 8 வழி சாலை வேண்டுமா, வேண்டாமா என அங்குள்ள விவசாயிகளை கேட்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.