கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சபட்டால் அந்த தடுப்பூசி முதலில் நானே போட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் அதன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த மருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் சில நாடுகளில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கண்டறியப்பட்ட கோவீஷீல்டு கோவாக்சின் தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மக்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்ட எந்த நம்பருக்கும் இதுவரை சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சபட்டால் அந்த தடுப்பூசி முதலில் நானே போட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி குறித்து அவர் கூறுகையில், தடுப்பூசி எடுத்துக்கொண்ட உடனே உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்ற எண்ணத்தில் யாரும் இருக்கக்கூடாது. தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்களுக்குப் பின் தான், இரண்டாவது டோஸ் போடப்படும். இந்த டோஸ் கொடுத்து 14 நாட்களுக்கு பின்பு தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…