எங்கள் தலைமை கண் அசைத்தால் 2 பேரையும் துக்கிவிடுவோம் – திமுக எம்பி செந்தில்குமார்

Default Image

உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் தொடர்பில் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ட்வீட்.

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் பா.ஜ.கவில் இணைந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மனு அளித்தபோதும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், தனக்கு கட்சி பதவியாவது கொடுக்க வேண்டும் என கோரியதாகவும், இதனை திமுக தலைமை கண்டு கொள்ளாததால் பாஜகவுக்கு செல்ல முயற்சி எடுத்துள்ளார்.

அதன்படி, கேரள சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து, அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். இதுகுறித்து பாஜகவை சேர்ந்த நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா “திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம்” என தெரிவித்து மாநில தலைவர் அண்ணாமலை தலைமையை ஏற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்றுள்ளார்.

இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக. உங்களுக்கு ஒரு தகவல் என கூறி, உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் துக்கிவிடுவோம் என தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்