தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் அப்பாவும் டாக்டர் ஆகி இருக்க முடியாது – அன்புமணி ராமதாஸ்
தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் அப்பாவும் டாக்டர் ஆகி இருக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் பேச்சு.
சென்னையில் அனைத்திந்திய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே பணியாளர்கள் சங்க நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் உரையாறிறனார். அப்போது பேசிய அவர், தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் அப்பாவும் டாக்டர் ஆகி இருக்க முடியாது.
எங்க அப்பா ஏரோட்டிக் கொண்டிருப்பார் அவருக்கு உதவியாக நான் இருந்திருப்பேன். சமூக நீதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். முதலில் அதன் அர்த்தம் புரிய வேண்டும், அதன்படி செயல்பட வேண்டும்.
அம்பேத்கரை ஒரு வட்டத்திற்குள் வைத்து விட்டனர், காந்திபோல அம்பேத்கரும் இந்தியாவிற்கு முக்கியமானவர், எல்லோருக்குமான தலைவர். மிகப்பெரிய வருத்தம் அம்பேத்கர் ஒரு ஜாதிக்கான தலைவர் என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.