#BREAKING : பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் – முதல்வர் பழனிசாமி
பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் முதலில் அதிமுகவில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.இதன் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.தற்போது தமிழக பாஜகவில் மாநில துணைத் தலைவராக உள்ளார்.சமீபத்தில், நயினார் நாகேந்திரன்,தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, பாஜகவில் தாம் மனவருத்தத்தில் இருப்பதாகவும், கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருந்தாலும் தான் கட்சி மாறப்போவதில்லை என்று கூறினார். இந்த செய்தி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நண்பர்களே என் கருத்தை தெளிவாக படிக்கவும். என் கோபம் பாஜக வை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது. வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன். கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளை கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு என கூறினார்.
இதன் பின் இதையடுத்து, நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள், நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள், அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், ‘அதிமுகவில் இருந்து தான் நயினார் நாகேந்திரன் பாஜகவிற்கு சென்றுள்ளார், மீண்டும் அவர் அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.