நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்…ஆர்.பி.உதயகுமார்
இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் உள்ள எண்ணூரில் செய்தியர்களுக்கு பேட்டியளித்தபோது, தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் என முதல்வரின் அறிவிப்பை மு. க ஸ்டாலின் உள்ளிட்டோர் பலர் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
மேலும், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கடைபிடித்த கொள்கைதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறார். மொழித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோமே தவிர மொழி கற்றுக்கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை என கூறினார்.
இதையடுத்து, நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள், நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள், அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் கடந்த 2017-ம் ஆண்டுஅதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.