மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றது.திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தற்போது தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை ஈடுபட உள்ளதாக தெரிவித்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மு.க. அழகிரி பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் கலைஞர் பெயரில் இந்த அமைப்பு அல்லது கட்சி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆனால் மு.க.அழகிரி தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை.
இதனிடைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அழகிரி குறித்து கூறுகையில், மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் .பாஜகவில் இணைவது தொடர்பாக மு.க.அழகிரியுடன் இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…