குடிநீர் பிரச்னை குறித்த ஆலோசனைக்குப்பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன.நீராதாரங்கள் வற்றி போன நிலையிலும், குடிநீர் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .இதற்காக ரூ65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிகளவில் டேங்கர் லாரிகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நாள் ஒன்றுக்கு 9800 நடைகள் தண்ணீர், லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டுவருகிறது. இதை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னையின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முன்வந்த கேரள முதல்வருக்கு வாழ்த்துக்கள். தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை கேரளா தந்தால் நன்றாக இருக்கும். இது குறித்து கேரள முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்.
அமைச்சர்களின் வீடுகளில் அதிகளவு தண்ணீர் என்பது தவறான தகவல் ஆகும்.ஆந்திர மாநிலம் வழங்க வேண்டிய 12 டிஎம்சி நீரில், 2 டிஎம்சி மட்டுமே வழங்கியது.
தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது.மேகதாது விவகாரத்தில் ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குடிநீர் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . தரமற்ற, அதிக விலைக்கு தண்ணீரை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…