அதிகபடியாக மழை பெய்தால் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது பற்றி ஆட்சியரே முடிவு எடுக்கலாம் – அன்பில் மகேஷ்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால், இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருவதால், பள்ளி அமைந்துள்ள பகுதிகளின் சூழ்நிலையை பொறுத்து விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த கல்வி நிறுவனங்களே முடிவு செய்யலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருந்தார்.
குஷியில் மாணவர்கள்..! இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், மழை பெய்து வரும் நிலையில், அந்தந்த சூழலை பொருத்து, பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகப்படியாக மழை பெய்தால் மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுக்கலாம் என தெரிவித்த அவர், மழைக்காலங்களில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.