ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திடீரென்று கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மாமல்லபுரத்திற்கு அருகிலுள்ள பட்டிபுலம் கிராமத்தில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டானது இந்தியா முழுவதும் உள்ள 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் வருகைத் தந்தனர். இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடந்து வரும்பொழுது கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வெளிவந்த செய்திகளை கவனித்த ஆளுநர் தமிழிசை, நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது. ஆனால், நான் கீழே விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருகிறது என்று கூறியுள்ளார். நன்மைகளை செய்ய ஆரம்பித்தால் நாட்டிற்கு ஆளுநரும் எதற்கு, ஆட்டிற்கு தாடியும் எதற்கு என பேச ஆரம்பித்து விடுவார்கள் என்று தமிழிசை சௌந்திரராஜன் மேலும் கூறியுள்ளார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…